Saturday, December 31, 2005

திருவெம்பாவை 17
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17

வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே !சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்குஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும், தேவர்களிடமும்எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு,நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர்இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத்தந்தருள் செய்யும் தொழில் உடையவனை, அழகிய கண்களை உடையநம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை,நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்தஇந்நீரில் பாய்ந்தாடுவோம் !

கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 30, 2005

திருவெம்பாவை 16
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த்திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப்போல் (கார் நிறத்தில்) திகழ்க ! எங்களை ஆளுடைய அவளின்மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக ! எம்பிராட்டியின்திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும்எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு, முனைப்போடுதான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள்என்பது போலப் பொழிக !

இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;முன்னி - முற்பட்டு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 29, 2005

திருவெம்பாவை 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15

அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி,நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் எப்போதும் உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையானகண்ணீரில் தோய்ந்து, (இறைவனையே எண்ணி எப்போதும்அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை !வேறு தேவர்களை இவள் பணிவதில்லை ! பேரரசனாகிய இறைவன்பால்இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும்வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான,மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !

ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்; பார் - உலகம்; அரையர் - அரசர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 28, 2005

திருவெம்பாவை 13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை
தன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச்திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை -சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக்கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றவல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மைவளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும்பாடி நீராடுங்கள் !

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம் - கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

திருவெம்பாவை 13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை
தன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச்திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை -சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக்கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றவல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மைவளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும்பாடி நீராடுங்கள் !

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம் - கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 27, 2005

திருவெம்பாவை 13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13

குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பதுபோலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்துஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்; பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 26, 2005

திருவெம்பாவை 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்; தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்திஆடுகின்ற கூத்தப்பிரான்; இந்த விண்ணையும், மண்ணையும், நம்எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும்வருபவன்; அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும், மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள்ரீங்காரமிடவும், பூக்கள் நிறைந்த இக்குளத்தில் ஈசனின் பொற்பாதத்தை வாழ்த்திக்கொண்டே நீராடுங்கள் !

குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 25, 2005

திருவெம்பாவை 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறியஇடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 24, 2005

திருவெம்பாவை 10
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;கோது - குற்றம்; பரிசு - வழி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 23, 2005

திருவெம்பாவை 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரானநாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கேநண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்;அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப்பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால்எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு - அடிமை

(For thirumuRai with explanation visit http://www.shaivam.org/siddhanta/thisl.htm )

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 22, 2005

திருவெம்பாவை 8
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்றபக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;ஏழை - பெண்(சக்தி).

(For thirumuRai with explanation in English visit http://www.shaivam.org/siddhanta/thisl.htm )

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 21, 2005

திருவெம்பாவை 7
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்றுசொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !தூக்கத்தின் தன்மை தான் என்னே !

உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;வாளா - சும்மா; பரிசு - தன்மை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 20, 2005

திருவெம்பாவை 6
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கிநம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடியகழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான சிவபெருமானைப் பாடு !

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;ஊன் - உடல்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

திருவெம்பாவை 5
மாலறியா நான்முகனுங் காணா மலையினை
நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5
தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாதமலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற (இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற ! இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!
பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்; ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 19, 2005

திருவெம்பாவை 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! இன்னுமா விடியவில்லை ? படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ? தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்துபாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

திருவெம்பாவை 3.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற ! படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடையகுற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ? தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;புன்மை - கீழ்மை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

திருவெம்பாவை 2.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், "எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தைஉண்மையில் வைத்தாயோ ? படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ? தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? (அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களைநமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

திருச்சிற்றம்பலம்


1.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1


தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியைநாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களைவாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயேவிம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயேதன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; அமளி - படுக்கை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.